• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பதிலடியாக காசா மீது போர் தொடுத்தது. இஸ்ரேல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் காசா சீர்குலைந்தது. சுமார் 46 நாட்களுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை நான்கு நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்த நான்கு நாட்களில் ஹமாஸ் 50 பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். அதேவேளையில் இஸ்ரேல், தங்கள் நாட்டின் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர். இஸ்ரேலும் பாலஸ்தீனர்களை விடுதலை செய்தது. இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியுடன் போர் நிறுத்தம் ஒப்பந்தும் முடிவடைகிறது.

போர் நிறுத்தம் முடிவடைந்ததும், தாக்குதலை தொடங்குவோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார். இதனால் எகிப்து, கத்தார், அமெரிக்கா போர் நிறுத்தத்தை நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தின. இந்த நிலையில் போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply