• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடக்கு முறைக்கு எதிராக மக்கள் வீறு கொண்டு எழுவார்கள்

இலங்கை

அடக்கு முறைக்கு எதிராக மக்கள் வீறு கொண்டு எழுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள நா.உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் காரியாலயத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இப்போது போர் துப்பாக்கிச் சத்தங்கள் இல்லையே ஒழிய அதேபோல் ஒரு சூழலில் தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்கின்ற அத்தனை பேருக்கும் நாங்கள் செய்கின்ற கைமாறு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஆகும்.

இந்த அடக்குமுறை தொடர்ச்சிய இருந்து வருகின்றது. இப்போது எங்களுடைய மக்கள் பட்டினிச்சாவை எதிர் நோக்கி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது எங்களுடை தேசத்தில் புத்தகோயில்களை கட்டுவதும் பறவைகள் சரணாலயம் அமைக்க நிலங்களை அபகரித்தும் வருகின்றனர்.

மேலும் தென்னிலங்கையில் இருந்து எங்கள் பகுதியிலுள்ள கடலிலே வருகின்ற மீனவர்கள் சட்டத்துக்கு புறம்பான வலைகளை கொண்டுவந்து மிக மோசமான செயல்பாடுகளை செய்துவருகின்றனர்.

இவ்வாறு ஒவ்வொரு விடையத்திலும் எங்களுடைய பிரதேசம் பறி போகின்றது. அடக்குமுறை என்பது நாங்கள் எதிர்பார்த்தது, அந்தவகையில் எங்களுடைய மக்கள் நிச்சயமாக கிழர்ந்தெழுவார்கள்.

நகுலேஸ் கைது செய்யப்பட்டார் அவர் செய்த தவறு என்னவென்று பார்க்கின்றபோது மாவீரர் பெற்றோரை கௌரவித்ததுதான் அவர் செய்த தவறு. பயங்கரவாத தடைச்சட்டத்தில் அவரை கைது செய்து ஏற்றுக் கொள்ள முடியாது.

இதனை கண்டிக்கின்றோம். அந்த அடிப்படையில் மாவீரர் தின நினைவேந்தல் பயங்கரவாத தடைச்சட்டத்தில் அடக்க நினைக்கின்றனர் நாங்கள் இதை எதிர்பார்கவேண்டும் ஆனால் பின்நோக்கி போக முடியாது. மக்கள் கிழந்தொழுவார்கள் அதற்கான ஆதரவு செயற்பாட்டை நாங்கள் செய்வோம்.

போர் முடிந்துவிட்டது சகல விடையங்களை செய்யமுடியும் என எதிர்பார்க்க முடியாது. போர், துப்பாக்கி சத்தங்கள் இல்லையே ஒழிய அதேபோல் சூழலில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆகவே இதனை எதிர்பார்த்து எதிர்த்து செயற்படுகின்ற மண்ணுக்காக உயிர்தியாகம் செய்கின்ற அத்தனை பேருக்கும் நாங்கள் செய்கின்ற கைமாறு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது. ஆகவே இந்த விடையத்தில் நாங்கள் பின்னோக்கி போக முடியாது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply