• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 8 பேர் கொன்று குவிப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. இதில் ஹமாசின் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஒன்றரை மாதங்களுக்கு பிறகு 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. அதேபோல் இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் போர் நிறுத்தம் தொடங்கியது. அன்று 13 இஸ்ரேலியர்கள், 11 வெளிநாட்டினர் என 24 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

தொடர்ந்து நேற்று நள்ளிரவில் 2-வது கட்டமாக இஸ்ரேலை சேர்ந்த 13 பேர், தாய்லாந்தை சேர்ந்த 4 பேர் என 17 பேரை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள துல்கரேம் அகதிகள் முகாமில் உள்ளவர்கள் உளவு பார்த்து தகவல் கொடுப்பதாக அவர்களை பாலஸ்தீன போராளிகள் பிடித்தனர்.

இஸ்ரேல் படைகள் 24 மணி நேரத்தில் குறைந்தது 8 பாலஸ்தீனர்களை கொன்றுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளானர்.

அந்த 8 பேரையும் கும்பல் ஒன்று கொலை செய்தது. பின்னர் அவர்களது உடல்களை தெருக்கள் வழியாக இழுத்து சென்றனர். அப்போது உடல்களை கால்களால் எட்டி உதைத்தனர். அதன் பின் 8 பேரின் உடல்களை மின் கம்பத்தில் தொங்கவிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Reply