• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிம்பாப்வே அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் - அட்டவணை வெளியீடு

இலங்கை

சிம்பாப்வே அணியினர் ஜனவரி மாதம் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கமைய, போட்டியை ஆரம்பித்து ஜனவரி 06 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை ஒருநாள் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் அனைத்து போட்டிகளும் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

T20 போட்டிகள் எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இந்த போட்டியின் அனைத்து ODI மற்றும் T20 போட்டிகளும் பகல்-இரவு போட்டிகளாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுப்பயணத்தின் அட்டவணை பின்வருமாறு.

1வது ஒருநாள் போட்டி – ஜனவரி 6ம் திகதி – பல்லேகலே
2வது ஒருநாள் போட்டி – ஜனவரி 8ம் திகதி – பல்லேகலே
3வது ஒருநாள் – ஜனவரி 11 – பல்லேகலே
1வது T20 – ஜனவரி 14 – தம்புள்ளை
2வது T20 – ஜனவரி 16 – தம்புள்ளை
3வது T20 – ஜனவரி 18 – தம்புள்ளை
 

Leave a Reply