• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிரிக்கெட் அணியின் தூதுவராக கீர்த்தி சுரேஷ் நியமனம்

சினிமா

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
  
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், வருகிற நவம்பர் 26 தேதி நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள நுழைவுச்சீட்டு விற்பனையை நடிகை கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்துள்ளார்.

தற்போது கேரளாவின் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான நல்லெண்ண தூதராகவும் கீர்த்தி சுரேஷை நியமிக்கப்பட்டுள்ளார். கேரள கிரிக்கெட் சங்கம் மகளிர் அணிக்கான விளம்பர தூதுவரை நியமிப்பது இதுவே முதல்முறை. 
 

Leave a Reply