• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிக் பாஸ் சர்ச்சைகள் பற்றி பிரதீப் போட்ட ட்வீட் 

சினிமா

பிக் பாஸ் 7ம் சீசனில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு முன்பு வெளியேற்றப்பட்டார். அதனால் வெடித்த சர்ச்சை காரணமாக நெட்டிசன்கள் கமல்ஹாசன், விஜய் டிவி என எல்லோரையும் ட்ரோல் செய்தனர்.

நேற்றைய எபிசோடில் பேசிய கமல் அந்த ரெட் கார்டு முடிவை எடுத்தது போட்டியாளர்கள் தான், அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல பேசினார். மேலும் பிரதீப் செய்த தவறுக்கு கிடைத்த தண்டனை அது என்றும் பேசி இருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரதீப் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். "எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். ரொம்ப எல்லாம் யோசிக்காதீங்க. நான் ஜாலியா தான் இருக்கேன்."

"போய் பட்டாசு வெடிக்கிறதுனா வெடிங்க. கரி குழம்பு சாப்பிடுங்க. வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க. உங்க சப்போர்ட் எல்லாம் நான் படம் பண்ணும்போது குடுங்க" என பிரதீப் பதிவிட்டு இருக்கிறார். 
 

Leave a Reply