• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கழிவறையில் மாயா மற்றும் ஐஷு செய்த வேலை - அதிர்ச்சியில் பார்வையாளர்கள் 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் மாயா இன்னும் சில பெண் போட்டியாளர்கள் சேர்ந்து கொண்டு இல்லாத வேலைகளை பார்த்து வருகின்றனர். அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்கு தெரியவில்லை என்றால் பரவாயில்லை. கடந்த சீசன்களில் போட்டியாளர்கள் தாங்கள் செய்வது தவறு என்று தெரியாமலேயே.. தாங்கள் செய்வது சரியாகத்தான் இருக்கும் என்று நினைப்பில் மோசமான செயல்களை செய்வதை பார்த்திருக்கிறோம்.
  
ஆனால் மாயா மற்றும் அவருடைய குழுவில் இருப்பவர்கள் நாங்கள் செய்வது தவறு தான் என்பதை தெரிந்தே அவர்கள் செய்கிறார்கள்.

மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினாலும் பரவாயில்லை என்ற முடிவில் இருக்கிறார்கள். மேற்கொண்டு கமலஹாசன் ஏதேனும் எச்சரிக்கை விடுத்தால் அங்கே நாம் மன்னிப்பு கேட்டு விடலாம். இதுதான் நம்முடைய வேலை என்று கூலாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதன் மூலம் தாங்கள் செய்வது தவறு என தெரிந்தே இவர்கள் வேண்டுமென்று போட்டியாளர்களை சீண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் சட்டத்தை மீறும் விதமாக போட்டியாளர் மாயா மற்றும் ஐசு இருவரும் பிக் பாஸ் விதியை மீறி குசு குசு என பேசினார்கள். ஆனால், ஐசு குசு குசு என பேசுவது மாயாவுக்கு புரியவில்லை போல் தெரிகிறது.

இதனை தொடர்ந்து எனக்கு புரியவில்லை எனக் கூற தன்னுடைய மைக்கை கழட்டி வீசிவிட்டு பாத்ரூமுக்குள் சென்றார் ஐஸு.

அதனை தொடர்ந்து மாயாவும் தன்னுடைய மைக்கை கழட்டி வீசிவிட்டு அவர் பின்னாலேயே பாத்ரூமுக்குள் சென்று விட்டார்.

இருவரும் ஒரே பாத்ரூமுக்குள் என்ன செய்தனர்..? சக போட்டியாளர்களை ஏதேனும் சிக்கலில் சிக்க வைப்பதற்காக திட்டம் போடவே இப்படியான வேலைகளை செய்து வருகின்றனர்.

இதனை பிக் பாஸ் உடனடியாக கண்டித்து அவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர் ரசிகர்கள் இந்த விவகாரம் தற்பொழுது பூதாகரமாக எடுத்து வருகின்றது. 
 

Leave a Reply