• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என் வாழ்க்கை பற்றி பேச உனக்கு தகுதியே இல்ல - Bully Gang மீது கொந்தளித்த ரச்சிதா மஹாலக்ஷ்மி  

சினிமா

கடந்த வருடம் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் ரச்சிதா மஹாலக்ஷ்மி. கணவர் நடிகர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருவது பற்றி ரச்சிதா அந்த ஷோவில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இந்நிலையில் பிக் பாஸ் 7ம் சீசனில் தினேஷ் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் ரச்சிதா பற்றி பேசவில்லை என்றாலும், அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது பற்றி தினேஷை பேச வைக்க வேண்டும் என மாயா மற்றும் பூர்ணிமா கேங் என திட்டம் போட்டது.

இந்நிலையில் தற்போது ரச்சிதா இந்த விவகாரம் பற்றி பேசி இருக்கிறார். "பிரபலமாக இருப்பதால் எங்கள் வாழ்க்கை சீக்ரெட் இல்லை. ஆனால் அது உங்களுக்கு தேவையில்லாத ஒன்று. அதை பற்றி விவாதிக்க என் வாழ்க்கை ஒன்றும் பொது பிரச்சனை இல்லை."

"சீப் ஆன கேமுக்காக என்னையும் என் தனிப்பட்ட வாழ்க்கையையும் இழுக்காதீங்க" என ரச்சிதா பதிவிட்டு இருக்கிறார். 
 

Leave a Reply