• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை

ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

வரிக் கொள்கை மற்றும் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை எனவும் பல்லாயிரக்கணக்காண வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பிலும் இதன்பேது கலந்துரையாடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் டொக்டர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
 

Leave a Reply