• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாடுகளில் புதிய வசூல் சாதனை படைத்த லியோ

சினிமா

விஜய்யின் வசூல் வேட்டை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து கொண்டே போகிறது. வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த படம் லியோ. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த லியோ படத்தை ரூ. 487 கோடி வரை தயாரிப்பாளர் பிசினஸ் செய்ததாக ஏற்கனவே தகவல் வெளியானது.
  
இதை தொடர்ந்து முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் லியோ இதுவரை உலகளவில் ரூ. 577 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 207 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரூ. 201 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளார் நடிகர் விஜய்.

இதனால் தன்னுடைய சினிமா கெரியரில் புதிய உச்சத்தையும் தொட்டுளார். இதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 
 

Leave a Reply