• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிகரித்துள்ள வெப்பநிலை - வைத்தியர்கள் எச்சரிக்கை

இலங்கை

நாட்டில் தற்போது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பப் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள யாழ். போதான வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் பேரானந்தராஜா, ஹீட் ஸ்ட்ரோக் மூலம் வைத்தியசாலையின் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களிலும் வெப்பநிலை அதிகரித்துச் செல்லக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றமையால், வெப்பநிலை அதிகரிப்பை தடுக்கும் நோக்கில் அதிகளவிலான மரங்களை நடவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க வீட்டிலுள்ள வயோதிபர்களுக்கு போதிய நீர் ஆகாரங்களை வழங்க வேண்டும் எனவும் வைத்தியர் பேரானந்தராஜா அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply