• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தளபதி படத்தின் வயது 32 

சினிமா

வசனங்களைக் குறைத்து காட்சிகளில் கச்சிதமாக கதை சொல்லும் மணிரத்னம்...
இசையால் கதை சொல்லும் இளையராஜா..
கதைநாயகன் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி ரஜினி..
இவர்கள் மூவரும்  சேர்ந்து கொடுத்த கொடையின் பிரம்மாண்டம் `தளபதி'. 
இந்த மூவருக்கும்  மட்டுமல்ல நூறாண்டு கடந்தாலும் தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு திரைப்படம் இது...
ரஜினிகாந்த் நடித்த Class படங்கள் குறைவு. ஆனால் Mass படங்களோ அதிகம். இந்த இரண்டுவிதமான படங்களை தனித்தனியாக பிரித்து, ஒரு தராசில் வைத்து பார்த்தால், Class படங்களையே ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள்.
அப்படி ரஜினி நடித்த Class படங்களில் முக்கியமான படம் தளபதி .
 'சூர்யா' என்ற கதாபாத்திரம் ரஜினிக்கு. தமிழ் சினிமா தொடங்கிய காலம் தொட்டே பல கதாநாயகர்களை 'அநாதை' என்று படத்தில் அறிமுகம் செய்வார்கள். ஆனால் அந்த அநாதை என்ற ஒரு வலிமிகுந்த தாக்கத்தை ரசிகனிடம் சரியாக காட்டாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் இந்த படத்தில் ரஜினி தான் ஒரு அநாதை என்று சொல்லாமலேயே கண்ணில் ஒரு ஏக்கத்தோடும், அழுத்தமான நடிப்போடும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார் ரஜினி 
கலெக்டர் அலுவலகத்தில் சீரும் அந்த வீரமும் ,கலெக்டர் வீட்டில் முன்னாள் காதலியை பார்க்கும் போது மயங்கும் காதலும்,எடுத்துக்கோ எடுத்துக்கோ இந்த உயிர் உனக்கு தானே என்பதில் நட்பும் அதோ ஆத்துல  துணிய சுத்தி போட்டு டாங்க என குழந்தையிடம் சொல்லும் உருக்கமும் போதும் ரஜினியின் பன்முக நடிப்பை பற்றி சொல்வதற்கு.
பதின்மூன்று வயதில் யாரோ செய்த தவறால் ஈன்றெடுத்த சூர்யாவை ரயிலில் அநாதையாக சேலை போர்த்தி வீசுவாள் அவன் தாய். அது தான் சூர்யாவின் முதல் அழுகை. 
அப்பொழுது கேட்கும் சூர்யாவின் அழுகைக்கு பின்னணியில் ஒரு புல்லாங்குழல் ஒலிக்கத்தொடங்கும். `சின்னத்தாயவள்’ பாடலின் இசைப்பதிப்பாக அந்த புல்லாங்குழல் சொல்லும் செய்தி `அழாதே’. 
ரயிலிலிருந்து ஆற்றுக்கு வந்த சூர்யாவை ஊர்மக்கள் தூக்கியெடுக்கும்பொழுது மீண்டும் சூர்யாவின் அழுகை; மீண்டும் புல்லாங்குழலின் `அழாதே’ ஓசை. 
பிரிந்து செல்லும் காதலை எண்ணி  தவிக்கும்பொழுது கண்ணீர் வராமல் இருக்குமா என்ன?. கசிந்துத் தழும்பும் கண்களுக்கு வயலின் அளித்த ஆறுதலைதொடர்ந்து புல்லாங்குழல் இசையும் பின்தொடரும் அந்த புல்லாங்குழலுக்கு `அழாதே’ என்ற மொழி..
கொலைவெறித் தாக்குதலால் உயிருக்குப் போராடும் தேவாவை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்செல்லும்பொழுது `சாகாத தேவா, முழிச்சுக்கோ’ என்று கதறும் தேவாவிற்கு அழாதே என வயலினே தரும் ஆறுதல்.

 தேவாவைக் கொல்ல முயன்றவனை கொன்றவர்களைப்பிடிக்க விசாரணை நடக்கும் காட்சி. அம்மா பெயர் கேட்கும் காக்கியிடம் `தெரியாது. தெரியாதுடா. நான் பிறந்தப்பவே தூக்கி எறிஞ்சுட்டா’ என்று ஆற்றாமையில் வெடிக்கும் சூர்யாவுக்கு அழாதே என  ஆறுதல் சொல்லும் வயலின் இசை. ..
வளர்ந்த பிறகு தான் மிதந்து கரைசேர்ந்த ஆற்றங்கரையை வெறித்து பார்த்துக்கொண்டு ஏக்கத்தோடு `அம்மா ஏன் என்ன தூக்கிப்போட்டா’ என்ற பின்னாலும் அதே புல்லாங்குழல். 
அப்பொழுது தான் திரையில் `இசை - இளையராஜா’ என்று தெரியும். அதுவரை  செவிகளில் இருந்த இசை நம் கண்முமன் வரும். 
காதல் கைகூடாத நிலையில் தன் நிலையைச்சொல்லி அழுவாள் சுப்புலட்சுமி. அழும் சுப்புலெட்சுமியிடன் தேங்கிய கண்களோடு `அழாதே, கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு.. போடி.. போ.. ’ என்று சொல்லி முடித்து திரும்பும் சூர்யாவுக்கு மீண்டும் ஆறுதல் தரும் வயலின் இசை. 
 பிரிவுக்குப்பின்னர், சுப்புவும் சூர்யாவும்  அர்ஜுன் வீட்டு படிகளில் சந்திக்கும்பொழுது பிரிந்த உயிர்கள் தங்களது உடல்களை எட்டிப்பார்ப்பது போல வயலின் மட்டும் ஒலித்துக்கொண்டிருக்கும். தமிழ் சினிமாவின் அடையாளமான காட்சி அல்லவா இது..
நீங்க மேலே கண்ட காட்சிகளை கொஞ்சமாக ம்யூட் போட்டு பாருங்க...அல்லது தளபதி படத்தின் பிஜிஎம்களை மட்டும் தனியே எடுத்து மற்ற எந்த படத்தில் வேண்டுமானிலும் பொறுத்தி பாருங்க...
அட்சரசுத்தமாக பொருந்தும்...
இது தான் ராஜா மேஜிக்...
இந்தப் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த காட்சி இறுதி காட்சி தான். ட்ரெயின் கிளம்பப் போகும் போது அரவிந்த் சாமி அம்மா, போலாமா எனக் கேட்பார், அவர் ரஜினியை பார்ப்பார், அவர் அப்படியே நிற்பார், இன்னொரு முறையும் கேட்பார், அம்மா ட்ரெயின் கெளம்பப் போகுது போலாமா என, அப்போது ரஜினியின் கையைப் பிடித்துக் கொண்டு நீ போ அர்ஜூன் நாங்க சூர்யாவோட இருக்கோம் என்பார், ரஜினி முகத்தில் சந்தோசம், நெகிழ்சி, பாசம், சோகம் என அனைத்தும் கலந்து ஒரு எக்ஸ்ப்ரசன் காட்டுவார், அப்படியே பேக்ரௌண்டில் சூரியனைக் காட்டி , சின்னத்தாயவள் பாடலோடு படம் நிறைவு பெறும் , கிளாசான காட்சி........ இதை எத்தனை முறை பார்த்திருக்கிறேன் என்று கணக்கே கிடையாது......
படத்தின் வெற்றி குறித்து சொல்லவே வேண்டியதில்லை. ரஜினி ரசிகர்களைக் கவர்ந்ததை விட சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த சில ரஜினிப் படங்களுள் தளபதிக்கு முதலிடம் வழங்கலாம். 
படம் வெள்ளி விழாக் கண்டது. இந்தப் படத்திலிருந்து ஒன்றை தெரிந்து கொள்ளலாம், ரஜினியும் இது மாதிரி  படங்களிலேயே நடித்து வந்திருந்தால்  இந்நேரம் நடிப்பிற்கு கமல் என்னும் நிலையும் மாறியிருந்திருக்கும்...
இறுதியாக ஒன்றை பொருத்தி பார்ப்போம்..
கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை முற்றி  தொட்றா பாக்கலாம் தொட்றா என விஸ்வரூபமாய் நிற்க்கும் ரஜினி இது தளபதி ..எடுத்தது மணி..
அதே காவல் நிலைய காட்சி. செமத்தியாக ரஜினி  அடி வாங்குவார்..கேவலமான காட்சி அமைப்பு ..இது காலா.எடுத்தது ரஞ்சித்..
பாத்திரத்தை பூஜை அறையில் வைப்பதும் பிச்சை எடுக்க பயன்படுத்துவதும் பயன்படுத்துபவரை பொறுத்தே.
தளபதி தமிழ் சினிமா கீரிடத்தில் வைரகல்.

 

Pugal Machendran Pugal
 

Leave a Reply