• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாணி ஜெயராம் 

சினிமா

பி.சுசீலா, எல்ஆர்.ஈஸ்வரி போன்ற ஜாம்பவான்கள் காலத்தில் தனது தனித்த குரல் அடையாளத்தால் புகழ்பெற்ற வாணி ஜெயராமை தமிழ் திரை இசையில் அதிகம் பயன்படுத்தியது சங்கர் கணேஷ் இரட்டையர்கள் தான்.
திரையிசை திலகம் கேவி.மகாதேவன், மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, வி.குமார்,விஜயபாஸ்கர், ஷ்யாம், இசைஞானி இளையராஜா, சந்திரபோஸ், எஸ்ஏ.ராஜ்குமார் உள்பட பலர் இசையில் வாணி ஜெயராம் பாடியுள்ளார்.
ஆனால், அதில் அதிகம் பாடியது சங்கர் கணேஷ் இசையில் தான்.
மேகமே மேகமே துவங்கி எத்தனை, எத்தனை வகையான பாடல்கள்.
ஏழு சுவரங்களில் எத்தனைப் பாடல் எனப்பாடிய வாணி, 
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்தரிக்காய் என கிராமத்து மண்ணைப் பிசைந்து நமக்குத் தருவார் . 
ஒருநாள் உன்னோடு ஒரு நாள் என ரிதமெடிக் டூயட்டை நினைக்கும் போதே 
மண்ணுலகில் இருந்து தேவன் இறங்கி வருகிறான் என்ற இறைகீதம் பாடி பக்தியில் மெய்மறக்க வைப்பார்.
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது என கேட்கும் போது மனதை நொறுங்க வைப்பார். 
நானே நானா யாரோ தானா என மெய்மறக்கச் செய்வார். 
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகளில் கேட்டு சலசலக்க வைப்பார். 
நினைவாலே சிலை செய்து உனக்காக வைப்பேன் எனப் பாடி நினைவைக் கிளறுவார். 
கங்கை நதியோரம் ராமன் நனைந்தான் என சொற்களில் நனைய வைப்பார். 
அம்மானை அழகுமிகு கண்மானை என பாடலில் திளைக்க வைப்பவர் சட்டென, 
மலைராணி முந்தனை சரிய சரிய என தடுமாற வைப்பார்.

 என் கல்யாண வைபோகம் உன்னோடு தான் என ஏக்கத்துடன் ஏங்க வைப்பார். 
நானே நானா யாரோ தானோ என கிறங்கவும் வைப்பார்.
முக்தா சீனிவாசன் இயக்கிய ‘சினிமா பைத்தியம்` படத்தில் சங்கர் கணேஷ் இசையில் ஒலித்த
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை அதில் உன் வண்ணம் தான் என்னோடு தான் ….
என்ற பாடலைக் கேளுங்கள். அந்த பாடல் தான் `குட்டீ’ இந்தி படத்தில் வாணி ஜெயராம் பாடியது. அதையே தமிழில் சினிமா பைத்தியம் படத்தில் வாணியே பாடியது தான் பியூட்டி.
ஸ்ரீநிவாஸ்....

வள்ளியம்மை
 

Leave a Reply