• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நான் அதிபராக இருந்திருந்தால், இஸ்ரேலில் இந்த அட்டூழியங்கள் நடந்திருக்காது- டிரம்ப் 

ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் அரசை விமர்சித்துள்ளார். சமீபத்தில் கைதிகள் பரிமாற்றம் செய்ததுடன், ஈரானின் 6 பில்லியன் டாலர் பணத்தை பரிமாற்றம் செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்ததை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

கொடியது. குழந்தைகள், இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நான் உங்களுடைய அதிபராக இருந்தபோது, வலிமையின் காரணமாக நாம் அமைதியை பெற்றிருந்தோம். தற்போது நமக்கு பலவீனம், சிக்கல், குழப்பம் உள்ளது. நான் அதிபராக இருந்திருந்தால், இஸ்ரேலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஒருபோதும் நடந்திருக்காது'' என்றார்.

Leave a Reply