• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாதித்த இங்கிலாந்து மருத்துவர்கள் - குழந்தை இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்த தனது தங்கைக்கு மூத்த சகோதரி தனது கருப்பையை தானம் செய்த நிலையில் அதனை வெற்றிகரமாக பொருத்தி இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான அதிர்ஷ்டசாலியான 40 வயதான மூத்த சகோதரி, குழந்தை இல்லாத தனது 34 வயது சகோதரிக்கு தாயாகும் வாய்ப்பை வழங்குவதற்காக தனது கருப்பையை தானம் செய்துள்ளார்.

இரண்டு சகோதரிகளுக்கும் திருமணமாகிவிட்டாலும், தங்கையின் கருப்பை கருவைச் சுமக்கும் அளவுக்கு வளர்ச்சியடையாததால், அவரால் தாயாக முடியவில்லை.

இதனையடுத்து, ஒக்ஸ்போர்டில் உள்ள சேர்ச்சில் மருத்துவமனை மருத்துவர்கள், 9 மணி நேரம் 20 நிமிட அறுவை சிகிச்சைக்கு பின் தங்கைக்கு மூத்த சகோதரி தானமாக வழங்கிய கருப்பையை வெற்றிகரமாக மாற்றியுள்ளனர்.

தங்கைக்காக தியாகம் செய்த சகோதரி

சுமார் 20 பேர் கொண்ட குழு இந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்றது. முழுமையான அறுவைச் சிகிச்சைக்கு 17 மணிநேரம் ஆனது.

இங்கிலாந்தில் நடக்கும் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையும் இதுவாகும்.

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை குறித்து 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருவதாகவும், இந்த அறுவை சிகிச்சையின் வெற்றியால், மலட்டுத்தன்மையுள்ள பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்த குழுவின் தலைவரான பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Leave a Reply