• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை பல்கலைக்கழக பட்டதாரிகளில் 50%  பேர் வேலையின்மையால் தடுமாறுகின்றார்கள்

இலங்கை

இலங்கை பல்கலைக்கழக பட்டதாரிகளில் 50.78 சதவீதம் பேர் வேலையின்மையால் தடுமாறுகின்றார்கள் .
 2021 ஆம் ஆண்டு தரவுகளின் படி பல்கலைகழக பட்டதாரிகளாக சித்தி பெற்ற 50,616 பட்டதாரிகளில் 25,704 பேர் தங்களுக்குரிய வேலைகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

அரசாங்க  நியமனங்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்கிற எல்லைக்குள் சுருங்கி போய்  இருக்கின்றது.
இங்கே விஞ்ஞான, முகாமைத்துவ ,நாடகமும் அரங்கியல் பட்டதாரி என எந்த வேறுபாடுகளுமின்றி பட்டதாரிகள் வெறுமனே அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக மட்டுமே நியமிக்கப்படுகின்றார்கள்.
கல்விக்கு தொடர்பில்லாத மேற்படி நியமனங்களால் பட்டதாரிகளுக்கும் அபிவிருத்திக்கும் என்ன பயன் என தெரியவில்லை?
இன்றும் கூட இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.1% ஆக மட்டுமே இருக்கின்றது.
இதனால் அரச மற்றும் சேவை துறையை மையமாக கொண்ட இலங்கையின் தனியார் துறைகளால் புதிய   வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் இருக்கின்றது.  
இது போதாதென்று அரசியல் வாதிகளின் சிபாரிசுகள் மூலமே அரச வேலை கிடைக்கும் என்பது எழுதப்படாத விதியாக  இருக்கின்றது.
இவ்வாறான பல சிக்கல்களால்  இலங்கை பட்டதாரிகள் நாட்டை விட்டு வெளியேற  முயற்சிக்கின்றார்கள்.
இவ்வாறு வெளியேறும் பட்டதாரிகள்  Knowledge, Skill (Critical thinking, Interpersonal skills,Technical skills,Communication skill) and Confidence போன்ற பல விடயங்களில் தடுமாறுவதால் சர்வதேச தொழிற்ச்சந்தையை எதிர்கொள்ள முடியாமல் சிக்கி கொள்ளுகின்றார்கள் .

Post pandemic இற்கு பின்னரான சர்வதேச தொழிற்ச்சந்தை Digitalized ஆக மாறி வரும் நிலையிலும் கூட இந்த  நிலைமை தான்  தொடருகின்றது.
அதாவது  Skill mismatch காரணமாக இலங்கை பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இன்னமும் அமையவில்லை.
இதன் காரணமாக வாய்ப்புகள் மற்றும் வருமானம் இல்லாமல் பட்டதாரிகள் புலம்பெயரும் நாடுகளிலும் பெரும்பாலும் சிக்கலை தான் எதிர்கொள்ளுகின்றார்கள் .
Improve Domestic Opportunities,Enhance Higher Education Quality,Scholarships and Financial Incentives,Promote Research and Innovation,Facilitate Networking and Industry Connections,Political,Cultural and Social Factors போன்ற விடயங்களில் பல்கலை கழகங்களும் ,பல்கலை மானிய ஆணைக்குழுவுக்கு கவனம் செலுத்தினால் Brain Drain உட்பட்ட மேற்படி நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் .
ஆனால் அது பற்றி அக்கறை இல்லாமல் பட்டப்படிப்புக்கு ஆகும் செலவை  வெளியேறும் பட்டதாரிகள் திருப்பி செலுத்த வேண்டும் என வீரம் பேசுகின்றார்கள்.

 

Leave a Reply