• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வறட்சியான காலநிலை - பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்

இலங்கை

நாட்டில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களுக்கு பவுசர் மூலம் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1இலட்சத்து 90 ஆயிரத்தை எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக வறட்சியான காலநிலை காரணமாக 15 மாவட்டங்கள் மற்றும் 52 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக குறித்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, அந்தப் பகுதிகளில் 54,979 குடும்பங்களைச் சேர்ந்த 183,038 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் மாத்திரம் 75,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 70,238 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிப்பவர்கள் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நாட்டில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் பவுசர் மூலம் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply