• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்

சினிமா

அந்த காலத்தில் கோவையில் "ஜூபிடர் பிக்சர்ஸ்"என்ற நிறுவனம் திரைப்படங்கள் தயாரித்து வந்தது.அந்த நிறுவனத்தில் துணை நடிகராக ஒப்பந்தமாகி எம்.ஜி.ஆர் நடித்து கொண்டு இருக்கிறார்!
அந்த நிறுவனத்திற்கு சண்டை காட்சிகளுக்கு உடல் பலமான வாட்ட சாட்டமான இளைஞர் ஒருவர் நடிக்க வருகிறார்.அவர் பெயர் "மருதமலை மருதாசலமூர்த்தி அய்யாவு தேவர் சின்னப்பா தேவர்"!
இந்த பெயரின் சுருக்கம் தான் எம்.ஏ.சின்னப்ப தேவர்!அப்படி சண்டை காட்சிகளுக்காக வந்த சின்னப்ப தேவருக்கும்,எம்.ஜி.ஆர்க்கும் நெருக்கமான நட்பு ஏற்படுகிறது.இருவரும் ஒன்றாக உடற்பயிற்சி செய்கிறார்கள்!ஒன்றாக சுற்றுகிறார்கள்.
சின்னப்ப தேவர் வீட்டுக்கு அருகில் எம்.ஜி.ஆர் தன் தாய்,அண்ணனுடன் குடி வருகிறார்.சின்னப்ப தேவரும் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு வந்து போகும் அளவுக்கு நெருக்கமாகி விடுகிறார்கள்.
ஒருதரம் எம்.ஜி.ஆரை காண தேவர் அவர் வீட்டுக்கு செல்கிறார்!வாசலில் தாய் சத்யபாமா கவலையோடு வாசலையே பார்த்தபடி அமர்ந்து இருக்கிறார்!
"அம்மா ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்"என தேவர் கேட்டபோது,'ராம சந்திரனும்,சக்ரபாணியுயையும் இன்னும் காணவில்லை!!அவர்கள் வாங்கி வரும் சம்பளத்தை வைத்து அரிசி வாங்கி சமைக்கனும்!புள்ளைங்க பசியோடு இருப்பாங்க"என கவலைப்படுகிறார்.
தேவர்,"இருங்கம்மா வரேன்"என சொல்லிவிட்டு கிளம்புகிறார்!அப்போதல்லாம் உடம்பை உடற்பயிற்சி செய்து வாட்ட சாட்டமாக இருக்கும் தேவர் பெரிய காக்கி கால்சட்டை போட்டு இருப்பார்.
நேராக வீட்டுக்கு போன தேவர் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய டவுசரில் இரண்டு பைகளிலும் அரிசியை அள்ளிப்போட்டு ஒரே ஓட்டமாக எம்.ஜி.ஆரின் தாயிடம் வந்து,"அம்மா முறத்தை எடுங்க"என சொல்லி அப்படியே முறத்தில் அரிசியை கொட்டுகிறார்!கிட்டத்தட்ட சின்னப்படியால் ஒரு படி இருக்கிறது!
அதை ஆசை தீர வாங்கி சமைத்து வைக்கிறார்!மிகவும் தாமதமாக வந்த எம்.ஜி.ஆரும் அவர் அண்ணனும் வீட்டில் கஞ்சி தயாராக இருப்பதை கண்டு ஆவலாக சாப்பிடுகிறார்கள்.
இந்த அரிசி எப்படி வந்தது என அம்மாவை கேட்டு தெரிந்து கொள்கிறார்!
காலங்கள் உருண்டோடுகிறது!அந்த காலத்தினால் செய்த உதவியாக தேவர் கொடுத்த அரிசிக்காக,எம்.ஜி.ஆர்!தேவர் பிலிம்ஸ்-க்காக 17 படங்கள் நடித்து கொடுக்கிறார்!
தேவர் பிலிம்ஸ் வளர்ச்சியில் எம்.ஜி.ஆர் பங்கு அளப்பறியது.சின்னப்ப தேவர் தடுமாறும்போதல்லாம் எம்.ஜி.ஆர் கை கொடுக்க தவறுவதில்லை!

காரணம் ஒரு படி அரிசி!
இதைத்தான் எம்.ஜி.ஆர் பாடி இருப்பார்!
"தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறிச்சாலும்
கூட இருந்தே குழி பறிச்சாலும்
கொடுத்தது காத்து நிக்கும்…
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்!"
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

Leave a Reply