• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பேராசிரியர் மு. இளங்கோவன் தமிழ் விக்கி தூரன் விருது பெற்றார்!

இலங்கை

தமிழ் ஆய்வுப்புலத்தில் தொடர்ந்து இயங்கி, சாதனைகள் படைக்கும் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குத் தமிழ் விக்கி தூரன் விருது, விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி தூரன் விருதுக்குப் புதுச்சேரிப் பேராசிரியர் மு. இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.  இவர் புதுவை அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

ஈரோட்டில் நேற்று (06.08.2023) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன், சூழலியல் அறிஞர் சு. தியடோர் பாஸ்கரன், மலையாளத் திறனாய்வு வல்லுநர் பி. கே. இராஜசேகரன் ஆகியோர் இணைந்து மு. இளங்கோவனுக்குத் தமிழ் விக்கி தூரன் விருதினை வழங்கினர். இரண்டு இலட்சம் ரொக்கப்பரிசு, நினைவுச் சிற்பம், பாராட்டிதழ் ஆகியன வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருது சிவசங்கருக்கு வழங்கப்பட்டது.

இரண்டு நாள் நடைபெற்ற விழாவில் மு. இளங்கோவனின் எழுத்துப்பணி, ஆவணப்படப் பணி, கணினி, இணையத்துறையில் செய்துள்ள பணிகள், நூலாக்கப் பணிகள், நாட்டுப்புறவியல் ஆய்வுகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இவர் உருவாக்கிய இரண்டு ஆவணப்படங்களின் சுருக்கப்பட்ட வடிவம் விழாவில் திரையிடப்பட்டன. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Leave a Reply