• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மின்சார வாகன விற்பனை இலக்கைத் தளர்த்தும் பிரித்தானியா

பிரித்தானியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் புதிய கார் விற்பனையில் 80 சதவீதத்தை மின்சார வாகனங்களாக மாற்றும் இலக்கைத் தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாகன உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்கள் மற்றும் சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு இந்த மாற்றம் பரிசீலிக்கப்படுகிறதாக கூறப்படுகின்றது.

அத்துடன் மின்சார வாகனங்களுக்கான தேவை, உற்பத்திச் செலவு மற்றும் மின்சாரக் கட்டமைப்பு தொடர்பான சவால்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் பிரித்தானியாவின் வாகனத் தொழில்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம். எனினும், மின்சார வாகன விற்பனை இலக்கில் மாற்றம் செய்வது தொடர்பான இறுதி அரசாங்க அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply