• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாரிஸில் சென் நதிக்கரையில் பரபரப்பை கிளப்பிய மோதல் - பிடிபட்ட ஆயுததாரி

பாரிஸின் 1-ஆவது வட்டாரத்தில் உள்ள 'சென்' (Seine) நதிக்கரையில், கத்தி ஏந்திய ஒருவருக்கும் சுமார் பத்து பேர் கொண்ட குழுவொன்றுக்கும் இடையே நேற்று (03) இரவு பாரிய மோதலொன்று வெடித்துள்ளது.

நேற்று அதிகாலை சுமார் 1 மணியளவில் நதிக்கரையிலுள்ள கடையொன்றின்  வெளிப்புற இருக்கைப் பகுதியில்  இந்த வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கதிரைகள் மற்றும் இரும்புக்கம்பிகளைக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வட்டகையில் மாதத்தில் பல தடவைகள், குறிப்பாக வார இறுதி நாட்களில் இவ்வாறான மோதல்கள் வழமையாக நடைபெறுவதாக அப்பகுதிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயினும், இம்முறை நபரொருவர் கத்தியுடன் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுததாரியைக் கண்டதும் அச்சமடைந்த வாடிக்கையாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் சிற்றுண்டிச்சாலையின் உட்பகுதிக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் துணிச்சலாகச் செயற்பட்டு, குறித்த ஆயுததாரியை மடக்கிப் பிடித்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் , கத்தி ஏந்திய அந்த நபரைக் கைது செய்துள்ளனர் 

Leave a Reply