• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எரிபொருள் விலையில் விரைவில் மக்களுக்கு நிவாரணம் – அரசாங்கம்

இலங்கை

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது இது தொடர்பில் மேலும் உரையாற்றிய பிரதியமைச்சர், 

எரிபொருளுக்காக அரசாங்கம் இதுவரை 57 பில்லியன் ரூபா மானியத்தை வழங்கியுள்ள நிலையில், இம்மாதத்துடன் அந்த மானியம் முடிவுக்கு வரவுள்ளது.

அந்த மானியத்தை மீண்டும் வழங்கலாமா என்பது குறித்த கொள்கை முடிவு எடுக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்ததன் காரணமாக, அந்த விலைகளுடன் ஒப்பிடுகையில் இங்கும் எரிபொருள் விலைகளைச் சற்று உயர்த்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.

அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவைப்படும் எரிபொருள் கடந்த மாதமே அதிக விலையில் கொள்முதல் கட்டளைகள் (ஆர்டர்) செய்யப்பட்டுள்ளது.

புதிய எரிபொருள் கொள்முதல் கட்டளைகளை மேற்கொள்ளும்போது இந்தக் குறைந்த விலைகளின் பலனைப் பொதுமக்களுக்கு வழங்க முடியும் – என்றார்.
 

Leave a Reply