இவர் உயரத்திற்க்கு வர இந்திய சினிமாவில் நடிகர்கள் இல்லை என்பதே நிசர்சனம்
சினிமா
இத்தனை வருட சினிமா ரசிகனாக பல நடிகர்களை பார்த்திருப்போம். ஒரு சாதாரண காட்சியை கூட அசாதாரணமா மாற்றும் திறமையானவங்க இருக்காங்க. ஆஃப் ஸ்கிரீன்ல ரொம்ப சாதாரணமா தெரிஞ்சவங்க கூட ஆன் ஸ்கிரீன்ல பிரமாண்டமா இருப்பாங்க.
இதெல்லாம் கேமரா உள்ள வந்து அவங்க நடிப்பால நம்மளை ஆச்சர்ய பட வைப்பது. இதெல்லாம் இவரும் கூட செய்வாரு. ஆனா ஒரு விசயம் எப்பவும் ஆச்சர்யமா இருக்கறது. எந்த டையலாக்கும் இல்லாம இப்படி அமைதியா இருக்கும் போதும் அந்த கேரக்டராவே ஆடியண்ஸை நம்ப வைக்கும் வேலையை இவர் மட்டும் தான் பண்றதா எனக்கு தோனும்.
இதே நாற்காலில கௌரவம் பேரிஸ்டர் ரஜினிகாந்தா அமர்ந்திருப்பாரு. ராஜ ராஜ சோழன்ல, சிவந்த மண்ல. அவன்தான் மனிதன்ல பெரிய பிஸ்னஸ் மேனாவும். எல்லாம் தன்னை விட்டு போய் எதுவும் இல்லாம ஒரு தகர டின்ல அமர்ந்திருப்பார். நவராத்திரில அந்த அந்த ஒன்பது கேரக்டரும் சேர்ல இருக்கும் ஒரு ஷாட் வரும்.
இப்படி எந்த கேரக்டருக்காகவும் தன் உடலை ஏற்றி இறக்கி கூடுதலான எந்த ஒப்பனைகளும் இல்லாம அதே உடல்ல நமக்கு அந்த பாத்திரத்திற் க்கு பொருந்தும் அளவில் மேஜிக் போல ஒன்றை எப்படி அவரால் செய்ய முடிந்தது.
மறக்கவே முடியாத ஒரு காட்சி இதே படத்தில் வரும். சாதாரண ஒரு மில் தொழிலாளியாக இருந்தவர் பெரிய மில்லுக்கு முதலாளி ஆக வருவார். அவர் தொழிலாளியாக இருந்த காலத்து நண்பனாக ஜெமினி இருப்பார். அதே மில்லில் வேலை பார்த்து வருவார். சில தொழிலாளர் களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து நிர்வாகத்திடம் கேள்வி கேக்க வருவார் ஜெமினி.
கம்யூனிச தத்துவங்கள். ஏழை மக்களின் வாழ்க்கை முறை. நீயும் ஒரு காலத்தில் தொழிலாளியாக இருந்தவன் தானே போல பக்கம் பக்கமான அடுக்கு மொழி வசனங்கள் இருக்கும். சிவாஜிக்கு அதிகபட்சமா மூன்று வரிக்குள் தான் வசனம் இருக்கும்.
எப்படியும் இந்த காட்சில நம்ம ஸ்கோர் பண்ணிடலாம்னு ஜெமினி நினைச்சிருக்கலாம். ஜெமினி ஆக்ரோசமாக பேசப் பேச சிவாஜி கட்டுபடுத்த முடியாத கோபத்தில் தன் மேசை மேல் இருந்த பென்சிலை கத்தியில் சீவ ஆரமிப்பார். ஜெமினி பேச்சின் வீரியம் கூட கூட அந்த பென்சிலை தறுமாறாக சீவி கொண்டே ஜெமினி டையலாக் முடியும் நொடியில் மிக ஸ்டைலாக கெட் அவுட் னு சொல்லுவார்.
அந்த காட்சியின் வசனங்கள் ஆழமாகவும் ரொம்பவே ரசிக்கும் படியும் இருக்கும். டையலாக் இல்லாத இந்த சின்ன காட்சியில் கூட ஆடியன்ஸை தன் பக்கமே கட்டி போடும் ஒரு வித்தையை ரொம்ப சாதுர்யமா பண்ணிருப்பாரு. சமீபமா பேட்டிகள்ல விஜய் சேதுபதி ரஜினி ஒவ்வொரு ஷாட்லயும் ஆடியண்ஸை அட்ராக்ட் பண்ண என்ன மேஜிக் பண்ணுவாருனு சொல்லிருப்பாரு.
கிட்டதட்ட அதே யுக்தி தான் இது.
ஆனா சிவாஜி பண்ணது அதுல மேக்ஸிமைஸ் வெர்சன். இவர் உயரத்திற்க்கு வர இந்திய சினிமாவில் நடிகர்கள் இல்லை என்பதே நிசர்சனம்.
Prabu Shanmugam






















