• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்ஜிஆர் பேச்சைக் கேட்காமல் போனேன் - பாரதிராஜா.

சினிமா

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் ஒருமுறை அவரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது என்னை ஒரு கல்லூரி தொடங்கச் சொன்னார் தலைவர். ஆனால் அப்போது நான் அதை ஏற்கவில்லை. நான் ஒரு சினிமா கலைஞன், எனக்கும் கல்லூரிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என அலட்சியமாக இருந்துவிட்டேன். ஆனால் அவர் தீர்க்கதரிசி. அது அப்போது புரியவில்லை. இன்னொன்று கல்வியைப்பற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது. நான் படிக்காதவன்தான்.

30 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் பேச்சைக்கேட்டு நான் கல்லூரி தொடங்கியிருந்தால் நிச்சயம் மதுரைப் பக்கம்தான் தொடங்கியிருப்பேன். ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைத்திருக்கும். அப்போது கல்வியின் முக்கியத்துவம் பற்றி எனக்கு புரியவில்லை.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நடந்த விழாவொன்றில் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார் பாரதிராஜா.

தொடக்கக் கல்வியின் தந்தை காமராஜர் என்றால்....உயர்கல்வியின் தந்தை எம்ஜிஆர்.

தான் முதல்வராக இருந்த போது கல்லூரி ஆரம்பிக்கும் அளவிற்கு வசதி படைத்தவர்களை அத்தனை பேரையும் பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் ஆரம்பிக்கச் சொன்னார். 

தான் படிக்காத காரணத்தினாலோ என்னவோ...கல்விக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்தார். 

Leave a Reply