• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி

சினிமா

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் விஜய் சேதுபதி. இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

பிசியான சினிமா பணிகளுக்கிடையே அடிக்கடி ரசிகர்களை சந்தித்து வரும் விஜய் சேதுபதி தாம்பரத்தில் நேற்று மாலை நடந்த ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு திடீரென நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அவரது வருகையை எதிர்பாராத திருமண வீட்டார் விஜய்சேதுபதியை கண்டதும் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.

தொடர்ந்து திருமண மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தினார். விஜய்சேதுபதி திருமணத்தில் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Leave a Reply