சுங்கத் திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகம்
இலங்கை
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக விமல் எஸ்.கே. லியனகமவை இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தர அதிகாரியான லியனகம, தற்பொழுது நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றி வருகிறார்.
இன்றுவரை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றி வந்த சீவலி அருகொடவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இவரது நியமனம் நிகழ்ந்துள்ளது.
இந்த நியமனத்திற்கான முன்மொழிவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சர் என்ற தகுதியில் முன்வைத்து அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றார்.






















