• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திறைசேரி டொலர் திருட்டு - இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்

இலங்கை

திறைசேரியிலிருந்து வெளித்தரப்பு ஒன்றினால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத்தில் அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (28) கூடவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போது, நிதி அமைச்சின் செயலாளரை குழுவின் முன்னிலையில் அழைப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக அரசாங்க நிதி பற்றிய குழு முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply