தடம் புரண்ட சாகரிக்கா புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்
இலங்கை
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த போது கடந்த 24ஆம் திகதி தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய குறித்த புகையிரதத்தின் சாரதி, காப்பாளர், உதவிச் சாரதி மற்றும் உதவிப் புகையிரத காப்பாளர் ஆகிய ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்ய புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது .
ஏப்ரல் 24, 2026 அன்று காலை 7:10 மணியளவில், வாத்துவ (Wadduwa) ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டது.





















