• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உண்மையாக உழைப்பவர்களை சினிமா கைவிடாது- கே.எஸ்.ரவிக்குமார்

சினிமா

ஐசரி கணேஷ் தயாரித்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், பிரித்விராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'கர' படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இதுகுறித்து கே.எஸ்.ரவிக்குமார் கூறும்போது, ''இன்றைய தலைமுறையிடம் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. 'கர' படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜாவை எடுத்துக்கொண்டாலும், ஏதேனும் 'கரக்ஷன்' இருந்தால் கத்தாமல் அருகே வந்து காதில்தான் சொல்லுவார்.

டிராகன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது அதன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தான், விக்னேஷ்ராஜா பற்றி சொன்னார். அவர் சொன்னதெல்லாம் உண்மைதான் என்பதை படப்பிடிப்பு தளத்தில் உணர்ந்தேன். இன்றைய தலைமுறையினர் பரபரப்பாக இருக்கிறார்கள். கடினமாக உழைக்கிறார்கள்.

அந்த கடின உழைப்பு பலனை தரும்போது, அவர்களின் வளர்ச்சி நமக்கெல்லாம் மகிழ்ச்சி தருகிறது. உண்மையாக உழைப்பவர்களை சினிமா கைவிடாது. அதற்கு அஷ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் வரிசையில் விக்னேஷ் ராஜாவையும் சொல்லலாம். 'கர' படம் அவருக்கு பெருமை தேடித்தரும்'', என்றார்.

Leave a Reply