• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்

இலங்கை

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டு பகுதியில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது நேற்றுமுன்தினம் இரவு(15) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைகாட்டு பகுதியில் நபர் ஒருவரால் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் வீட்டின் உடைமைகள் கண்ணாடி, தளபாடங்களை அடித்து சேதப்படுத்தி உள்ளார்.

குறித்த நபர் அப்பகுதியில் பல நாட்களாக அங்கிருப்பவர்களை அச்சுறுத்தி வருவதாகவும் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை உடனடியாக கைது செய்யுமாறு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
 

Leave a Reply