• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள சில்வர் ஸ்பிரிங்ஸ் (Silver Springs) பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

பூமியின் அடியில் சுமார் 9 கிலோமீட்டர் ஆழத்தில் இதன் மையம் அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நெவாடா மட்டுமின்றி அருகிலுள்ள கலிபோர்னியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன.

முக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல சிறிய பின் அதிர்வுகளும் ஏற்பட்ட நிலையில், இதுவரை எவ்வித பெரும் பொருட்சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
 

Leave a Reply