• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்பெயினில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து விபத்து

ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் லா கோமேரா தீவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தொன்று நேற்று (10) பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 27 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்களில் மூவர் அதீத காயங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, விானம் மூலம் அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply