எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றம் முன்பாக போராட்டம் – அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு
இலங்கை
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியை பதவி விலகுமாறு கோரி இன்று நாடாளுமன்றத்திற்கு முன்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சராக கடமை ஆற்றி வரும் குமார ஜயக்கொடி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக எதிர்க் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை குறித்த விவாதம் நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் நிலக்கரி கொள்வனவில் பாரியளவு மோசடி இடம் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வரும் பின்னணியில் இன்றைய தினம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு போராட்ட போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
…………………
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பத்தரமுல்ல தியத உயனவிற்கு அருகில் நாடாளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக பொல்துவ சந்திப்பகுதியில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






















