• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிரடி காட்டும் வடகொரியா - மின்சார கட்டமைப்பை முடக்கும் ஆயுதங்கள்

அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அவ்வப்போது சோதனை செய்து உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் வடகொரியா, மீண்டும் புதிய ஆயுத சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே நீண்டகாலமாக நிலவும் மோதல் சூழலில், தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை இலக்காகக் கொண்டு வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அண்மையில் “கிளஸ்டர் பாம்” பொருத்தப்பட்ட புதிய வகை ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளது.

இந்த ஏவுகணை இலக்கை அடைந்ததும், நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகளை சிதறவிடும் திறன் கொண்டதாகும். இதன் மூலம் சுமார் 17 ஏக்கர் பரப்பளவு சில நொடிகளில் சேதமடையும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மின்சார உற்பத்தி நிலையங்களை செயலிழக்கச் செய்யும் “கார்பன்-பைபர்” குண்டுகள் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வடகொரியா சோதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவின் மின்விநியோக கட்டமைப்புகளை முடக்குவதற்காகவே இத்தகைய ஆயுதங்கள் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. வடகொரியாவின் இந்த தொடர் ஆயுத சோதனைகள் மீண்டும் உலக நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளன.
 

Leave a Reply