அல்லு அர்ஜூன் - அட்லி படத்தின் புதிய அப்டேட்
சினிமா
அல்லு அர்ஜுனின் 22ஆவது படம் பான் வேர்ல்டு படமாக உருவாக இருக்கிறது. இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது. இந்தப் படத்தில் கோலிவுட், பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த அட்லீ இயக்குகிறார்.
அட்லீக்கு இது 6ஆவது படமாகும். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
ஹாலிவுட்டில் அவதார் திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் அட்லி இணைந்துள்ள படத்தின் அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருவதாக தெரிகிறது.






















