• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரானுக்கு எதிரான போர் - காயமடைத்த அமெரிக்க வீரர்கள் அதிகரிப்பு

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்துள்ளது. இந்நிலையில் போரின் போது காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பென்டகன் (Pentagon) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, தரைப்படை, வானூர்திப்படை, கடற்படை உள்ளிட்ட நான்கு பிரிவுகளையும் சேர்ந்த 365 படையினர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரைப்படையைச் சேர்ந்த 247 பேர் காயமடைந்துள்ளதுடன்  கடற்படையை சேர்ந்த 63 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

வானூர்திப்படையை சேர்ந்த 36 பேரும் மெரைன் படைப்பிரிவை சேர்ந்த 19 வீரர்களும் படுகாயமடைந்துள்ளனர் . இரானுக்கு எதிரான போரில் இதுவரை 13 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் ஏற்பட்ட இழப்புகளே பென்டகன் (Pentagon) அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

Leave a Reply