• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியா தண்டவாளத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண்

இலங்கை

வவுனியா தாண்டிக்குளம் தண்டவாளத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் (27) இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் வவுனியா தாண்டிக்குளம் ரயில் கடவையில் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியுள்ளது.

விபத்தில் கிடாச்சூரி சாஸ்திரிகூழாங்குளத்தை சேர்ந்த அல்பிரட் ஜெயராஜ் திலகவதி (வயது - 52) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply