சித்தார்த்தின் புது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
சினிமா
நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான '3BHK' படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சித்தார்த் நடித்து வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் 'ரவுடி அண்ட் கோ' படம் உருவாகி வருகிறது. 'டக்கர்' படத்திற்கு பிறகு சித்தார்த் மற்றும் கார்த்திக் ஜி கிரிஷ் இணையும் இரண்டாவது படம் இதுவாகும். இந்தப் படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு, சுனில் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ரேவா இசையமைக்கிறார். இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள 'ரவுடி அண்ட் கோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.





















