• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவு

இலங்கை

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு பிரதிநிதி நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தாலும் கொழும்பு உயர்நீதிமன்றத்தாலும் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (26) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களின் தீர்ப்புகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பரிசீலனை செய்வதற்காக அந்த மனுக்கள் இன்று மீண்டும் அழைக்க   ப்பட்ட போது, சட்டமா அதிபரை பிரதிநிதித்து ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே இந்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.
 

Leave a Reply