ஈரானை சுற்றிவளைக்கும் போர்க்கப்பல்கள் - அமெரிக்காவிற்கு வந்த எச்சரிக்கை, சூழும் போர் மேகம்
மேற்காசிய நாடான ஈரானில், விலைவாசி உயர்வை கண்டித்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நடந்து வரும் போராட்டங்களில், வன்முறை வெடித்து, 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராடுபவர்களுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்தார்.
மேலும், போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை கடைப்பிடித்தால், ராணுவத்தை அனுப்புவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், யு.எஸ்.எஸ்., ஆபிரகாம் லிங்கன் என்ற, விமானம் தாங்கி போர் கப்பலுடன் கூடிய கடற்படையினர் ஈரான் நோக்கி செல்வதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு, எச்சரிக்கை விடுத்து, ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இம்முறை எங்கள் மீது நடத்தப்படும், எந்தவொரு சிறிய அல்லது பெரிய தாக்குதலையும் நாங்கள் முழுமையான போராகவே கருதுவோம். அதற்கு மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.























