அமெரிக்கா பனிப்புயலால் பதற்றம் - மசகு எண்ணெய் உற்பத்தி தற்காலிக இடைநிறுத்தம்
அமெரிக்காவில் நிலவும் பனிப்புயல் காரணமாக, மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பனிப்புயல் உறை பனியாக மாற வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால், அங்கு மின்சார விநியோகத் தடை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பனிப்புயல் காரணமாக, மசகு எண்ணெய் உற்பத்தியை தற்காலிகமாக இடை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதுடன், இதனால் நாளொன்றுக்கு சுமார் 3 இலட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தியை இழக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.






















