• Welcome to TamilsGuide
செய்திகள் 1

90ஸ் கதாநாயகி சங்கவி..லேட்டஸ்ட் போட்டோஷூட்

சினிமா

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த அமராவதி படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் சங்கவி. இதன்பின் ரசிகன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நாட்டாமை, லக்கி மேன் என தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த சங்கவி, ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து நடிப்பதை நிறுத்தினார்.

2008ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த இந்திரா எனும் படத்தில் நடித்திருந்தார். இதன்பின் 2019ஆம் ஆண்டு வெளிவந்த கொளஞ்சி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்ட நடிகை சங்கவி இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 


 

Leave a Reply