நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது
இலங்கை
இன்று அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.0 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இன்று அதிகாலை பண்டாரவளை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 12.5 பாகை செல்சியஸும், பதுளை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.8 பாகை செல்சியஸும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மஹாஇலுப்பள்ளம பகுதியில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19.3 பாகை செல்சியஸ் ஆகும்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதேச தரவு சேகரிப்பு மையங்களிலிருந்து பெறப்பட்ட குறைந்தபட்ச வெப்பநிலை பெறுமானங்கள், வரைபடம் ஒன்றின் ஊடாகக் பின்வருமாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.






















