சிவாஜியை வைத்து படம் எடுக்கறே, என்னை வச்சு ஏன் எடுக்க மாட்டேங்கற?
சினிமா
ஒவ்வொரு விழா அன்றும் எம்.ஜி.ஆரிடம் சென்று அவருடையான ராசியான கையால 100 ரூபாய் வாங்குவது பாலாஜியின் வழக்கம்.
ஒரு தடவை எம்.ஜி.ஆரே, “சிவாஜியை வைத்து படம் எடுக்கறே, என்னை வச்சு ஏன் எடுக்க மாட்டேங்கற?" என்று கேட்டாராம்! அதற்கு பாலாஜியோ ஒவ்வொரு விழாவிற்கும் தான் தேடி வந்து அவரிடம் பணம் வாங்குவதாயும், அப்படி அவர் பணம் தருவதால் எம்.ஜி.ஆர் ஐ தான் முதலாளியாகவே நினைப்பதாகவும், ஒரு முதலாளியை வைத்து ஒரு தொழிலாளி எப்படி படம் எடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
பாலாஜிக்கு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட
நட்பு ஒரு உன்னதமான நட்பு.
2008 ஆம் ஆண்டு பாலாஜி மிகவும் உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார். அப்போது ஜெயலலிதா அவரை அக்கறையுடன் உடல் நலம் விசாரித்தார். தொடர்ந்து சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை பாலாஜி விட்டு விடும்படி ஜெயலலிதா உரிமையுடன் கண்டித்தார். மேலும் பாலாஜியின் டாக்டரிடம் பாலாஜியின் உடல் நிலைபற்றி தனக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார். ஜெயலலிதாவின் நட்பின் அன்பை நினைத்து நெகிழ்ந்து போனார் பாலாஜி
பதிவு- பிரசாந்த்!.






















