• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனேடிய நாடாளுமன்றத்தில் கால் பதித்த யாழ்ப்பாணத்தின் சாதனை நாயகர்கள்

கனடா

இலங்கையின் வளர்ந்து வரும் ராப் இசைகலைஞரான வாகிசன் இராசையா உள்ளிட்ட குழுவினர் கனடா நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளதுடன் அங்கு இடம்பெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்றுள்ளதுடன் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலரை சந்தித்துள்ளனர்.

அண்மைய காலங்களில் எங்கே திரும்பினாலும், யாழ் மண்ணின் மைந்தன் வாகீசனின் சொல்லிசை அதிரும் தருணத்தில் தமிழ் மொழியை தன் அடையாளமாக கொண்டு மெட்டிசைக்கும் இக்கலைஞன் குறித்த நிகழ்வில் பங்கேற்றமை அனைத்து தமிழருக்கும் மகிழ்ச்சி பெற்றுதருகின்றது.

அண்மையில் பிரித்தானியா எலிசபெத் மகாராணியின் அரண்மனையில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் பங்கேற்ப்பதற்கான அங்கீகாரம் வாகீசன் உள்ளிட்ட குழுவினருக்கு கிடைத்திருந்தமை குறிப்பிடதக்கது.

தனக்கே உரித்தான கவித்துவத்தாலும், பாடல்களாலும் தென்னிந்திய தொலைக்காட்சிகள் உட்பட உலகளவில் பிரபல்யமடைந்த யாழ் மண்ணின் மைந்தன் வாகீசன், இன்று உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வாகீசன் உள்ளிட்ட குழுவினரின் அண்மைய தனித்துவ படைப்பான  வண்ணமயில் ஏறும் என் தங்க வடிவேலோ..... என தொடங்கும் பாடல் பட்டிதொட்டி எங்கும்  பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் இணையத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.
 

Leave a Reply