• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஷாலின் புதிய படத்தின் டீசர் வெளியானது

சினிமா

காமெடி கலந்த கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் தேர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதியின் துடிப்பான இசையில் விஷால் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'ஆம்பள'. சந்தானம் காமெடி இப்படத்தின் ஹைலைட்.

இதே பாணியில் சுந்தர் சி விஷால் கூட்டணியில் எடுக்கப்பட்ட 'மதகஜராஜா' படமும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தில் விஷால் கமிட் ஆகி உள்ளார். இந்த படத்திற்கு 'ஆம்பள' பட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு 'புருஷன்' என பெயரிடப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இசையில் உருவாகும் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசரில், மனைவிக்கு பயந்த கணவனாக விஷாலும், கணவனை வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டி எடுக்கும் மனைவியாக தமன்னாவும், மேலும் இப்படத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ், பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். 
 

Leave a Reply