இஸ்ரேலுக்குள் நுழைந்த இலங்கையர் கைது
இஸ்ரேலுக்குள் நுழைந்த 43 வயதான இலங்கை நாட்டவர் ஒருவரை இஸ்ரேல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த இலங்கையர், ஜோர்டான் எல்லை ஊடாக சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கமைய, இலங்கையருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேல் காவல்துறையினரின் சர்வதேச பிரிவான இன்டர்போல் கிளை தெரிவித்துள்ளது.
அரசாங்க மற்றும் தனியார் துறைகள் ஊடாக இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் சட்டப்பூர்வமாக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், மனித கடத்தல்காரர்கள் மூலம் சட்டவிரோதமாக அந்த நாட்டுக்குள் நுழைய முயற்சிப்பது மிகவும் ஆபத்தானதுடன் உயிருக்கு அச்சுறுத்தலான செயலாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் போர்ச் சூழல் நிலவும் சந்தர்ப்பத்தில், பாலைவனப் பகுதிகள் ஊடாக எல்லைகளைச் சட்டவிரோதமாகக் கடப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.























