லங்கைத் தீவின் பூர்வகுடிகளான தமிழர்கள், இன்று அந்தத் தீவில் ஒரு சிறுபான்மை இனமாக மாற்றப்பட்டிருப்பது இயற்கையாக நடந்த ஒன்றல்ல..
இலங்கை
இலங்கை மண்ணின் வந்தேறிகளே 74% இருக்கும் போது, உண்மைக்குடிகள் (தமிழர்கள்) 12% இருப்பது பலருக்கு வியப்பை தரலாம்…
அதெப்படி உண்மை குடிகளை விட வந்தேறிகள் பலமடங்கு அதிகமாக இருக்கின்றனர்?
அதற்கான விடையை உலகளாவிய வரலாற்று உதாரணங்களோடு கீழே பார்ப்போம்.
வரலாற்றில் வலிமையான அரச அதிகாரம் கொண்ட குடியேறிகள், அந்த நிலத்தின் ஆதிக்குடிகளை எண்ணிக்கையில் குறைப்பது ஒரு பொதுவான உத்தியாக இருந்துள்ளது.
அமெரிக்க மண்ணின் உண்மையான சொந்தக்காரர்கள் அங்கிருந்த செவ்விந்தியர்கள் (Native Americans). ஆனால் ஐரோப்பாவிலிருந்து வந்த குடியேறிகள், துப்பாக்கிகளாலும், தந்திரங்களாலும் பூர்வகுடிகளை அழித்தனர்.
இன்று அமெரிக்காவின் மக்கள் தொகையில் வந்தேறிகளான ஐரோப்பியர்கள் மற்றும் பிற இனத்தவரே 98% உள்ளனர். உண்மைக்குடிகள் வெறும் 2% ஆக ஒரு சிறு பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு வாழ்ந்தவர்கள் அபாரிஜினல் (Aboriginal) மக்கள். ஆனால் பிரித்தானிய குடியேற்றங்களுக்குப் பிறகு, இன்று ஆஸ்திரேலியாவின் பெரும்பான்மை மக்கள் வெள்ளை இனத்தவர்களே. பூர்வகுடிகள் மிகக் குறைந்த சதவீதத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஐரோப்பாவிலிருந்து வந்த யூத குடியேறிகள், இன்று பாலஸ்தீனத்தின் பெரும் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். பூர்வகுடிகளான அரேபியர்கள் இன்று தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாகவும், சிறுபான்மையினராகவும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இதே போன்ற ஒரு வரலாற்றுத் தந்திரம்தான் இலங்கைத் தீவிலும் அரங்கேறியுள்ளது.
சிங்கள இனம் என்பது ஒரே ஒரு இடத்திலிருந்து உருவான இனம் அல்ல.
அது பல்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு திசைகளிலிருந்து வந்த குடியேறிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட இனமே சிங்கள இனம்.
சிங்களவர்களின் ஆதி வரலாறு என்று சொல்லப்படும் 'விஜயன் வருகை' என்பது ஒடிசா (கலிங்கம்) மற்றும் வங்காளப் பகுதிகளில் இருந்து வந்த குடியேற்றத்தையே குறிக்கிறது.
இவர்களின் DNA யும் இவர்களின் உருவ ஒற்றுமை யும் வங்காளிகளின் உருவ ஒற்றுமையுடன் ஒத்துப்போகிறது .
இலங்கையின் மத்திய மலைநாடு மற்றும் தெற்குப் பகுதிகளில் விவசாயம் , நீர்ப்பாசனம் செழித்தபோது, பிழைப்பு தேடியும் வணிகத்திற்காகவும் கேரளா (மலையாளம்), ஆந்திரா (தெலுங்கு) மற்றும் கர்நாடகப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் குடியேறினர்.
எங்கு பொருளாதாரம் மற்றும் விவசாயம் செழித்ததோ, அங்கு மக்கள் ஒன்றுகூடினர்.
அரசு ஆதரவு பெற்ற 'சிங்கள' மொழியை அவர்கள் கற்றுக் கொண்டனர்.படிப்படியாகப் பல்வேறு இனக்குழுக்கள் தங்களின் தாய்மொழியைத் துறந்து, ஒரு பொதுவான அடையாளமாக சிங்களவர்களாக மாறினர்.
கடல் வழிப் பயணம் மூலம் இந்தோனேசியாவின் ஜாவா போன்ற தீவுகளிலிருந்து அம்பாந்தோட்டை பகுதியில் வந்தவர்களும் பிற்காலத்தில் சிங்கள அடையாளத்தோடு தங்களை இணைத்துக் கொண்டனர்.
மிக சிறந்த உதாரணம் மகிந்த இராஜபக்சா…
மேற்குப் பகுதிகளில், குறிப்பாக புத்தளம் முதல் வெண்ணாப்புவா வரை உள்ள பகுதிகளில் வசித்த தமிழர்கள் காலப்போக்கில் சிங்களவர்களாக மாறியது ஒரு வரலாற்று உண்மை.
பௌத்த பிக்குகளின் செல்வாக்காலும், அரச அங்கீகாரம் வேண்டியும் பல தமிழ் குடும்பங்கள் சிங்கள அடையாளத்தைத் தழுவினார்கள்.
தலைமுறை மாற்றத்தில் தமிழ் மொழி கைவிடப்பட்டு சிங்களம் திணிக்கப்பட்டது. இன்று சிங்களப் பெயர்களைக் கொண்டுள்ள பல குடும்பங்கள் (உதாரணமாக: வர்ணகுலசூரிய, குருகுலசூரிய) உண்மையில் தமிழ் மீனவச் சமூகத்தின் பின்னணியைக் கொண்டவர்கள்.
இந்த மக்கள் அனைவரும் பௌத்த மதத்தையும், அதன் பின்னணியில் உருவான சிங்கள மொழியையும் ஏற்றுக்கொண்டதன் மூலம் 'சிங்களவர்' என்ற அடையாளத்தைப் பெற்றனர்.
தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்தநற்கு போர் எவ்வாறு காரணமாகியது என்பதை பார்க்கலாம்.
1976 முதல் 2009 வரை நடந்த போரில் சுமார் 2 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பீடுகள் கூறுகின்றன. இதில் பெரும்பாலானோர் 18-35 வயதுக்குட்பட்டவர்கள். இது தமிழர்களின் பிறப்பு விகிதத்தை (Fertility Rate) மற்ற இனங்களை விடக் கீழே தள்ளியது.
இலங்கையிலிருந்து வெளியேறி ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வாழும் சுமார் 10-15 லட்சம் தமிழர்கள் அங்கேயே குடியுரிமை பெற்றுவிட்டனர். இவர்கள் மீண்டும் தாயகம் திரும்ப முடியாத சூழல் நிலவுவது தமிழர்களின் எண்ணிக்கையை நிரந்தரமாகக் குறைத்துவிட்டது.
போர்க்காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழ் பகுதிகளில் திட்டமிட்ட முறையில் பிறப்பு விகிதத்தைக் குறைக்கச் சில மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகப் பல மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இலங்கையின் இனப்பரம்பல் மாற்றம் என்பது ஏதோ தானாக நடந்த ஒன்றல்ல.
அது திட்டமிட்ட சட்டங்கள், நில அபகரிப்பு, படுகொலைகள் மற்றும் கட்டாய மத/மொழி மாற்றங்கள் ஆகியவற்றின் கூட்டு விளைவு.
பூர்வகுடிகளான தமிழர்கள் எப்போதும் ஒரு பாதுகாப்பான எல்லைக்குள் (வ வடக்கு மற்றும் கிழக்கு) வாழ்ந்தனர்.
அவர்கள் வந்தேறிகளைப் போல மற்ற இனங்களைத் தங்களுக்குள் இணைத்துக் கொள்ளவில்லை (Pure and Static).
மேலும், காலங்காலமாக நடந்த திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புகள் மற்றும் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு போன்ற செயல்கள், பூர்வகுடிகளைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியது.
பூர்வகுடிகளாக இருந்த தமிழர்கள், இன்று தங்களின் சொந்த மண்ணிலேயே எண்ணிக்கையில் குறைக்கப்பட்டு, அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதைத்தான் Structural Genocide எனக்கூறுவார்கள்.
இலங்கையில் தமிழர்கள் என்பது ஒரு வெறும் சிறுபான்மை இனம் அல்ல.
அவர்கள் இந்த மண்ணின் ஆதிக்குடிகள்.
ஆனால், அரசியல் அதிகாரமும், மதவாதமும் இணைந்து ஒரு பூர்வகுடி இனத்தை வரலாற்றிலிருந்து துடைத்தெறிய முயல்கின்றன.
இழந்த நிலத்தையும், குறைந்து வரும் மக்கள் தொகையையும் மீட்டெடுப்பது என்பது தமிழர்களுக்கு கட்டாயமானது ஒன்று.






















