• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குளிர்கால தேசமாகும் வடக்கு!! சமாளிக்க சிரமப்படும் மக்கள்!!!

இலங்கை

உலர் வலய பிரதேசமான வடக்கு மாசி மாதத்தில் பனிப்பொழிவு காலநிலையாக இவ்வளவு காலமும் இருந்தது."மாசிப்பனி மூசிப்பெய்யும்" என்பதே நாம் அறிந்தது.ஆனால் மெல்ல மெல்ல காலநிலை காலங்கள் மாறுகின்றது.தை மாதமே பனியும், குளிரும் ஐரோப்பிய தேசங்களை ஞாபகப்படுத்துகின்றது.

இதனால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சுவாசப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.அதிலிருந்து எம்மைப் பாதுகாத்து மாறும் காலநிலைக்கேற்ப வாழ்க்கையை வடிவமைக்க வேண்டும்.

1. ஸ்வெட்டர் போன்ற குளிர் உட்புகா ஆடைகளை அணிதல்.

2. வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை இறுக மூடுதல்.

3. தரையில் நேரடியாக உறங்காமல் மெத்தையில் அல்லது பாயில் மெத்தைபோல துணிகளை பரப்பி உறங்குதல்.

4.காற்று வீசும் பக்கத்தில் படுக்கையை வைக்க கூடாது. மின் விசிறிகளை பாவிக்க வேண்டாம்.

5. சுடுநீர், தேநீர், கஞ்சி, சூப் குடித்தல் நன்று. இரவில் குளிர்ந்த பானங்கள் தவிர்க்கவும் சிறிதளவு இஞ்சி, மிளகு, சீரகம் சேர்த்த பானங்கள் நல்லது.

6.குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்த்தல்

7.அதிகாலையில் மிகக் குளிர் நிறைந்த நேரம் வெளியே செல்லாமல் இருக்கவும்.

8.தூதூவளை,மொசுமொசுக்கை, கற்பூரவள்ளி என்பவற்றை உணவில் சேர்த்தால்.

9.குளிர்கால நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சேர்த்தல்.
 

Leave a Reply