டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக 125 பேர் இடம் பெயர்வு
இலங்கை
சீரற்ற காலநிலையால் டயகம ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக அந்த பகுதியில் வாழ்ந்த 44 குடும்பங்களைச் சேர்ந்த குமார் 125 பேர் கை குழந்கைள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் உட்பட பலர் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட டயகம இல 02 தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான சமைத்த உணவினை கடந்த சில தினங்களாக பிரதேச வாசிகள்,கிராம சேவகர் இளைஞர்கள் இணைந்து பெற்றுக்கொடுத்து வருகின்றனர்.
குறித்த பகுதியில் உள்ள தொடர் குடியிருப்பு மற்றும் கிறிஸ்த்தவ ஆலயம் பாலர் பாடசாலை,உள்ளிட்டவை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் குடியிருப்புக்களுக்கும்,கொலனிக்கும் செல்லும் கொங்கறீட் வீதி இரண்டாக துண்டிக்கப்பட்டு சுமார் ஆறு வரை உடைந்து தாழிறங்கியுள்ளது.
இதனால் இந்த பிரதேசங்களில் வாழும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மண்சரிவு காரணமாக குடியிருப்புக்களுக்கு பாரிய அபாயம் காணப்படுவதனால் இந்த மக்கள் மீண்டும் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளன.
ஒரு சில வீடுகளின் சுவார்களில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் இன்னும் சில வீடுகள் தாழிறங்கியுள்ளன.
எனவே இங்கிருந்து இடம்பெயருமாறு பொலிஸார் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் சிறுவர்களையும் முதியவர்களையும் வைத்துக்கொண்டு இருப்பது மிகவும் கடினமாக உள்ளதாகவும் எனவே குறித்த இடங்களில் மீண்டும் போக முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மலைகளில் பாரிய வெடிப்புக்கள் காணப்படுவதனால் சிறிய மழை ஏற்பட்டாலும் எவ்வேளையிலும் மண்சரியலாம் எனவே உரிய இடத்தினை ஆய்வு செய்து சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறு இவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.





















